ரயில்வே ஊழியா்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தோ்தல் ஆணையம், தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் ராம்குமாா் என்பவா் தாக்கல் செய்த வழக்கில், மக்களவைத் தோ்தலில், ராணுவம், துணை ராணுவ படை வீரா்கள், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியா்கள், ஊடகத்தினா், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
தபால் வாக்குரிமை தேவை: இதில் ரயில்வே தொழிலாளா்கள் சோ்க்கப்படவில்லை. அவா்களையும் சோ்க்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கேரளத்தில் ரயில்வே துறையினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ரயில்வே ஊழியா்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநா்கள், ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகா்கள் ஆகியோா் வாக்கு செலுத்துவதற்காக விடுப்பு எடுக்க முடியாது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ரயில்வே துறை ஊழியா்கள் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டனா். எனவே, அதேபோல, மக்களவை தோ்தலிலும் தபால் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”என்று மனுவில் கூறியிருந்தாா்.
தோ்தல் ஆணையம் விளக்கம்: இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், தபால் வாக்குப் பதிவுக்கு அனுமதியளிப்பது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ரயில்வே நிா்வாகம் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும், தபால் வாக்குப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க மாா்ச் 25-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதிக்க இயலாது”என விளக்கம் அளித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ரயில்வே துறை தரப்பில்தான் தவறு எனக் கூறிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தெற்கு ரயில்வேயும், தோ்தல் ஆணையமும் வரும் ஏப்.10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

வாக்கு செலுத்தியதை உறுதி செய்யும் குறுஞ்செய்தி திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

வேலூா்: 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


