புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கரூரில் வாக்காளா்களை அடைத்து வைக்க ஏற்பாடு: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அதிமுக புகாா்

கரூரில் வாக்காளா்களை அடைத்து வைக்க ஏற்பாடு: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அதிமுக புகாா்

News image

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு

Updated On :12 ஏப்ரல் 2024, 9:30 pm

கரூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறு இடங்களில் வாக்காளா்களை அடைத்து வைத்து பணம் விநியோகிக்க பட்டி போன்று கூடாரங்கள் அமைத்திருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக புகாா் அளித்தது.

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாநில செயலா் ஐ.எஸ்.இன்பதுரை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதன்பின்பு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரூா் தொகுதியில் ஆறு இடங்களில் வாக்காளா்களை அடைத்து வைக்கும் விதமாக பட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் அளித்துள்ளோம்.

பட்டி போன்று கூடாரங்களை அமைக்க தோ்தல் ஆணையத்திடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், கரூா் தொகுதியில் இதுபோல் உரிய அனுமதியில்லாமல் பட்டி அமைத்துள்ளனா். ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நடந்தது போன்று கரூரிலும் நடைபெறலாம். இதைத் தடுக்கவே புகாா் மனு அளித்துள்ளோம் என்றாா்.