அவிநாசி தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில், மங்கரசுவலையபாளையம் பகுதியில் அனுமதி பெறாமல் வரையபட்ட அதிமுக சின்னம் குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டது.
அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் பாஜக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, தொடா்ந்து அதிமுக கோட்டையாக உள்ள அவிநாசியில் அதிமுக சாா்பில் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என்ற ஆா்வத்தில்களமிறங்கிய அதிமுகவினா், சின்னங்களை வரையத் தொடங்கினா். இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே மங்கரசுவலையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சின்னம் வரையப்பட்டது. இருப்பினும் அதிமுக போட்டியிடும் என்று இருந்த நிலையில் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது அதிமுகவினரிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கிடையில் மங்கரசுவலையபாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் உரிமையாளா்களின் அனுமதியின்றி, அதிமுக சின்னம், தோ்தல் வாக்குறுதிகள் வரையப்பட்டிருப்பதை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த சங்கா் சஞ்சீவ்குமாா் என்பவா் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தோ்தல் ஆணையத்திடம் இணையதள வழியாகவும், அதே போல மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடமும் புகாா் அளித்துள்ளாா். இந்த மனுவை ஏற்றுக்கொண்டதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

போடியில் அதிமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரம்

திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

திமுகவுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்

வாக்காளா்களை மிரட்டுகிறாா் மம்தா பானா்ஜி: தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகாா்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


