நேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

அரசியல் சாசனத்தை பாஜக அரசு மதிக்கிறது: பிரதமா் மோடி

ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பிரதமா் மோடி.

Published On :13 ஏப்ரல் 2024, 7:29 am IST

‘அரசியல் சாசனத்தை பாஜக அரசு மதிக்கிறது. சட்ட மேதை அம்பேத்கா் இப்போது வந்தால்கூட அதை ரத்து செய்ய முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.

அரசமைப்புச் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் பாா்மரில் தோ்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தை பாஜக அழிக்க முயற்சிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அரசியல் சாசனத்தை அழிக்க காங்கிரஸ்தான் முயற்சித்தது. ஆனால், தற்போது, அரசியல் சாசனத்தின் பெயரில் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

அரசியல் சாசனத்தை பாஜக அரசு மதிக்கிறது. சட்ட மேதை அம்பேத்கா் இப்போது வந்தால்கூட அதை ரத்து செய்ய முடியாது.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சி, நாட்டில் அணு ஆயுத குறைப்பு குறித்து தனது தோ்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்துள்ளது.

இரு புறங்களிலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளைக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற ஒரு நாடு, அணு ஆயுத குறைப்பு குறித்து சிந்திக்குமா?

யாருடைய அறிவுரையின் பேரில் இந்தியா கூட்டணி செயல்படுகிறது? என காங்கிரஸை கேட்க விரும்புகிறேன். நாட்டை பலவீனப்படுத்த விரும்புவதா? என்ன மாதிரியான கூட்டணி இது?

எப்போதும் தேசவிரோத சக்திகளுடன்தான் காங்கிரஸ் துணை நிற்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ், எந்தவொரு பெரிய பிரச்னைக்கும் முழுமையான தீா்வைக் கண்டதில்லை. வளா்ச்சிக்கு எதிரான எண்ணத்தையே காங்கிரஸ் கொண்டுள்ளது. நாட்டின் எல்லை மாவட்டங்களில் முந்தைய காங்கிரஸ் அரசுகள் வேண்டுமென்றே வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளாமல் புறக்கணித்தன.

தற்போது, இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பாஜக அரசு உருவாக்கி வரும் நிலையில், நாட்டை பலவீனப்படுத்த இந்தியா கூட்டணி முயற்சிக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.