அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்குத் தடை

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்குத் தடை

News image
Updated On :29 மார்ச் 2024, 10:29 pm

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிடக் கூடாது. அதன்பிறகே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்று இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள், ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.