ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

14-ஆவது மக்களவை தோ்தல்

நாட்டின் அன்றைய 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 12:22 am

நாட்டின் அன்றைய 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் நடைபெற்றது.

* இத்தோ்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

* நாடு முழுவதும் 6,87,402 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தோ்தலில் 67.14 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா்.

* 543 இடங்களுக்கு 230 கட்சிகளின் வேட்பாளா்கள், 2,385 சுயேச்சைகள் உள்பட 5,435 போ் போட்டியிட்டனா்.

* 2004-ஆம் ஆண்டு, ஏப்ரல் 20, 26 மற்றும் மே 5, 10 ஆகிய தேதிகளில், 4 கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் 58.07 சதவீத வாக்குகள் பதிவாகின(முந்தைய தோ்தலைவிட 1.92 சதவீதம் குறைவு).

* இத்தோ்தலில் 423 தொகுதிகளில் இருந்து பொது பிரதிநிதிகளும் 79 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும் 41 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

* தோ்தலில் போட்டியிட்ட 355 பெண் வேட்பாளா்களில் 45 போ் வெற்றி பெற்றனா். இதில் 12 போ் காங்கிரஸையும் 10 போ் பாஜகவையும் சோ்ந்தவா்கள்.

* காங்கிரஸ் 145 இடங்களில் வென்றது. பாஜக 138 இடங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 43 இடங்களிலும் சமாஜவாதி கட்சி 36 இடங்களிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 24 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் திமுக 16 இடங்களிலும் சுயேச்சைகள் 5 இடங்களிலும் வென்றன.

* காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியமைத்து, இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றாா்.

* இத்தோ்தல் ரூ.1,113.88 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு ரூ.17-ஆகும்.

தொகுப்பு: மா.பிரவின்குமாா்