காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு அருகில் இருந்த வாக்குச்சாவடிக்கு ஜோடியாக வந்து மணமகன் ஜனநாயகக் கடமையாற்றியாற்றினார்.
காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ராகுல். இவர் கட்டடப் பொறியாளர், வீடு கட்டும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் சிவரஞ்சனிக்கும் இன்று காலை காஞ்சிபுரத்தில் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் ஜோடியாக அருகில் இருந்த விக்டோரியா நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்றனர். அங்கு திருமண கோலத்தில் மணமகன் ரவி ராகுல் தனது வாக்கை செலுத்தினார்.
இதுகுறித்து மணமகன் ரவி ராகுல் கூறுகையில், ”அனைவரும் வாக்களிப்பது என்பது கட்டாயம். மேலும் இந்த திருமண நாளில் வாக்கு செலுத்தியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது எனவும், தமிழகமே அதிக அளவி்ல் 100 சதவிகித வாக்குகளை எதிர்பார்க்கிறது” என்றார்.
வாக்கு செலுத்த வந்த மணமக்களுக்கு வாக்குச் சாவடியில் இருந்த அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Summary
Kanchipuram: Newlyweds Arrive to Cast Their Votes Immediately After Their Wedding!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வெள்ளை சட்டை, காக்கி பேண்டில் வந்த அண்ணாமலை!
விஜய்க்கே வாக்கு! மறைமுகமாகக் கூறிய பிரபல நடிகர்!
புதுவை மக்களே, விழிப்புடன் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்: விஜய்

காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் மாற்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



