விருகம்பாக்கம் தொகுதியில் 5 சுற்றுகள் முடிவில் விஜய்யின் கார் ஓட்டுநரின் மகன் முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது நீண்டகால கார் ஓட்டுநரின் மகனான சபரிநாதனுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்திருந்தார்.
சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன் விஜய்யிடம் சுமார் 30 ஆண்டுகளாக ஓட்டுநராகவும், தனிப்பட்ட உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தவெக விருகம்பாக்கம் தொகுதிச் செயலாளராக பணியாற்றி வந்த சபரிநாதனுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டது அரசியல் களத்தில் கவனம் பெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விருகம்பாக்கம் தொகுதியில் தற்போது வரை 5 சுற்றுகள் முடிவடைந்துள்ளது.
இதில், தவெக வேட்பாளரான சபரிநாதன் 15,738 வாக்குகள் பெற்று 5,138 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ -வான ஏ.எம்.வி. பிரபாகர ராஜா 10,600 வாக்குகளும், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ விருகை வி.என். ரவி 8,915 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Summary
Vijay's Car Driver's Son Takes the Lead in Virugambakkam Constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக வேட்பாளா் காா்த்திக் வெற்றி
விருகம்பாக்கம் தொகுதியில் விஜய்யின் ஓட்டுநா் மகன் வெற்றி!

தேர்தல் 2026: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி? - நேரலை...

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலை!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



