புவனகிரி: தொகுதியைக் கைப்பற்ற அதிமுக முயற்சி

கடலூர் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியான புவனகிரி தொகுதியை திமுகவிடமிருந்து மீட்க அதிமுக கடும் முயற்சி எடுத்து வருகிறது.
புவனகிரி ராகவேந்திரா கோயில்
புவனகிரி ராகவேந்திரா கோயில்

தொகுதி அறிமுகம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக திகழ்கிறது.

பகுதிகள்: புவனகிரி தொகுதியில் இடம் பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புவனகிரி, சேத்தியாத்தோப்பு. கங்கைகொண்டான் பேரூராட்சிகளும், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியமும், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கீரப்பாளையம், மேல்புவனகிரி ஒன்றியம் முழுவதும் இணைத்து புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு செய்யப்பட்ட தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள்: புவனகிரி பேருராட்சி - 18 வார்டுகள், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி - 15 வார்டுகள், கங்கைகொண்டான் பேரூராட்சி - 15 வார்டுகள், மேல்புவனகிரி ஒன்றியம் - 40 ஊராட்சிகள், கீரப்பாளையம் ஒன்றியம் 43 ஊராட்சிகள், கம்மாபுரம் ஒன்றியம் 41 ஊராட்சிகள்.

கம்மாபுரம் ஒன்றியம்: பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம் வடக்கு, சேப்ளாநத்தம் தெற்கு, கோட்டகம், உய்யகொண்டராவி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, வடக்குவெள்ளூர், கூனங்குறிச்சி, ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, ஊத்தாங்கல், ஊ.மங்கலம், மும்முடிச்சோழகன், கம்மாபுரம், சு.கீணலூர், ஊ.கொளப்பாக்கம், வி.சாத்தமங்கலம், கோ.மாவிடந்தல், கார்குடல், கோ.ஆதனூர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், கார்மாங்குடி, ஏ.வல்லியம், சி.கீரனூர், மேலபாலையூர், மருங்கூர், கே.தொழூர், கீழப்பாலையூர், தேவங்குடி, சிறுவரப்பூர், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனூர், தர்மநல்லூர், கோட்டுமுளை, பெருவரப்பூர், பெருந்துறை, டி.பழவக்குடி, காவனூர்.

மேல்புவனகிரி ஒன்றியம்: அழிச்சிக்குடி, அகர ஆலம்பாடி, அம்மன்குப்பம், அம்பாள்புரம், ஆணைவாரி, பூதவராயன்பேட்டை, பு.கொளக்குடி, பு.சித்தேரி, பு.உடையூர், பு.ஆதனூர், சி,ஆலம்பாடி, சின்னநற்குணம், சொக்கன்கொல்லை, எல்லைக்குடி, எறும்பூர், ஜெயங்கொண்டான், வடகிருஷ்ணாபுரம், கத்தாழை, குமுடிமூலை, கிளாவடிநத்தம், மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதூர், மேலமணக்குடி, நெல்லிக்கொல்லை, நத்தமேடு, பெரியநற்குணம், பிரச்சனராமாபுரம், பின்னலூர், சாத்தப்பாடி, தெற்குதிட்டை, துறிஞ்சிக்கொல்லை, உளுத்தூர், வடதலைக்குளம், வடக்குதிட்டை, வத்தராயன்தெத்து, வீரமுடையானநத்தம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரைமேடு.

கீரப்பாளையம் ஒன்றியம்: கே.ஆடூர், ஆயிப்பேட்டை, அ.அக்ராமங்கலம், பூதங்குடி, தேவன்குடி, இடையன்பால்சேரி, எண்ணநகரம், கண்ணங்குடி, கீரப்பாளையம், கீழ்நத்தம், கிளியனூர், கூளாப்பாடி, மதுராந்தகநல்லூர், டி,மணலூர், சி,மேலவண்ணியூர், முகையூர். டி.நெடுஞ்சேரி, ஓடாக்கநல்லூர் ஒரத்தூர், பாளையஞ்சேர்ந்தன்குடி, பண்ணப்பட்டு, பரதூர், பெருங்காலூர், பூந்தோட்டம், சாக்காங்குடி, சி.சாத்தமங்கலம், செங்கல்மேடு, சேதியூர், சிறுகாலூர், தரசூர், தென்ஹரிராஜபுரம், தெற்குவிருந்தாங்கன், துணிசிரமேடு, வடஹரிராஜபுரம், வடபாக்கம், வாக்கூர், வாழைக்கொல்லை, வயலூர், சி.வீரசோழகன், வெள்ளியங்குடி, வெய்யலூர், விளாகம்.

தொகுதியில் இதுவரை வெற்றி பெற்ற கட்சிகள்: 1952 முதல் நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 6 முறையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 முறையும், இந்திய தேசிய லீக் ஒருமுறையும் வென்றுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:  புவனகிரி தொகுதியில் புவனகிரி தற்போது தனி தாலுக்காவாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் புவனகிரியில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படவில்லை. புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே ஆங்கிலேயேர் காலத்தில் 1942 - ல் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்ததால், அப்பகுதி மக்களின் நீண்ட கால போராட்டத்தினால், தற்போதை அதிமுக ஆட்சியில் ரூ. 27 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டி பணி தொடங்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இதுவரை வென்றவர்கள்:

1952 - வி.கிருஷ்ணசாமி படையாச்சி (இந்திய தேசிய காங்கிரஸ்)
1957 - சாமிக்கண்ணு படையாச்சி (இந்திய தேசிய காங்கிரஸ்)
1962 - ராமச்சந்திர ராயர் (இந்திய தேசிய காங்கிரஸ்)
1967 - ஏ.கோவிந்தராசன் (திமுக)
1971 - எம்.ஏ.அபுசாலி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
1977 - வி.ரகுராமன் (திமுக)
1980 - வி.வி.சாமிநாதன் (அதிமுக)
1984 - வி.வி.சாமிநாதன் (அதிமுக)
1989 - எஸ்.சிவலோகம் (திமுக)
1991 - ஜி.மல்லிகா (அதிமுக)
1996 - ஏ.வி.அப்துல்நாசர் (இந்திய தேசிய லீக்)
2001 - பி.எஸ்.அருள் (அதிமுக)
2006 - செல்விராமஜெயம் (அதிமுக)
2011 - செல்விராமஜெயம் (அதிமுக)
2016 - துரை.கி.சரவணன் (திமுக)

போட்டி: கடந்த தேர்தலில் வென்ற திமுக வேட்பாளராக துரை. கி. சரவணன் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தற்போதைய கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான அருண்மொழிதேவன் அதிமுக சார்பில் போட்டியிட கட்சி மேலிடத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட அக்கட்சி மாவட்டச் செயலாளர் கே.பி.டி.செழியன் கூட்டணி கட்சியை வலியுறுத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com