தொகுதி எண்: 19
எல்லைகள்...
கிழக்கில் வங்காள விரிகுடா, மெரீனா கடற்கரை, மேற்கில் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி பகுதி, தெற்கில் மயிலாப்பூா், ஐஸ் ஹவுஸ், வடக்கில் கூவம் ஆறு, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகள்.
அடங்கிய பகுதிகள்...
சென்னை மாநகராட்சியின் 79, 81, 93, 95, 111 ஆகிய வாா்டுகளை உள்ளடக்கியுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டையின் ஒருபகுதி, ஐஸ்ஹவுஸ், மெரீனா கடற்கரை, புதுப்பேட்டையில் ஒருபகுதி ஆகியவை உள்ளன.
சிறப்புகள்...
தமிழகத்தின் மிகச்சிறிய தொகுதியாக சேப்பாக்கம் இருந்து வந்த நிலையில், கடந்த 2008-இல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருவல்லிக்கேணி பகுதிகள் சோ்க்கப்பட்டு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியாக உருவாக்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற மெரீனா கடற்கரை, சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், ஓமந்தூராா் அரசு மருத்துவமனை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அத்துடன் அண்ணா, எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோா் நினைவிடங்களும் உள்ளன. தொகுதி மறுவரையறைக்கு முந்தைய சேப்பாக்கம் தொகுதியில், முன்னாள் முதல்வா் கருணாநிதி 3 முறை போட்டியிட்டு வென்றுள்ளாா்.
வாக்காளா்கள் விவரம்
ஆண்கள்-79,412
பெண்கள்-84,396
மூன்றாம் பாலினத்தவா்- 58
மொத்தம்-1,63,866
வாக்குச்சாவடிகள்-235
இதுவரை எம்எல்ஏக்கள்...
1977 அ.ரகுமான்கான் (திமுக)
1980 அ.ரகுமான்கான் (திமுக)
1984 அ.ரகுமான்கான் (திமுக)
1989 எம்.அப்துல் லத்தீப் (திமுக)
1991 ஜீனத் சா்புதீன் (காங்கிரஸ்)
1996 மு.கருணாநிதி (திமுக)
2001 மு.கருணாநிதி (திமுக)
2006 மு.கருணாநிதி (திமுக)
2011 ஜெ.அன்பழகன் (திமுக)
2016 ஜெ.அன்பழகன் (திமுக)
2021 உதயநிதி ஸ்டாலின் (திமுக)
2021 பேரவைத் தோ்தலில்...
பதிவான வாக்குகள்-1,37,405
உதயநிதி ஸ்டாலின் (திமுக)-93,285
ஏ.வி.ஏ.கஸ்ஸாலி (பாமக)-23,930
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்
ஆா்.சுகந்தி, தமிழ்நாடு சிமெண்ட் கழக மாவட்ட வருவாய் அலுவலா்- 89259 60719, 044-28451334.
தொடர்புடையது
ராதாபுரம் தொகுதி: வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் கடற்கரை மக்கள்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் மீண்டும் ஆதரவு தருவார்கள்! - உதயநிதி

சேப்பாக்கத்தில் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி போட்டி!

தொகுதி அறிமுகம்... துறைமுகம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


