குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர் செய்ய வேண்டியது என்ன?
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்களாக இருந்தால் அவர்கள் அது பற்றிய விவரங்களை செய்தித் தாளிலும், தொலைக்காட்சியிலும் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்களாக இருந்தால் அவர்கள் அது பற்றிய விவரங்களை செய்தித் தாளிலும், தொலைக்காட்சியிலும் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையமும் இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதன்படி வேட்பாளர்களும் அரசியல்கட்சிகளும் உரிய படிவங்களில் குற்றப் பின்னணி விவரங்களைக் குறிப்பிட்டு செய்தித் தாள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட வேண்டும்.
இந்த விவரங்கள், வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட பின் முதல் 4 நாள்களுக்குள் ஒரு தடவையும் ஐந்தாவது மற்றும் எட்டாவது நாள்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு தடவையும், ஒன்பதாவது நாளிலிருந்து தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நாளுக்கு உள்பட்ட காலத்தில் ஒரு தடவையும் வெளியிடப்பட வேண்டும்.
இந்த விளம்பரங்களை வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திடம் இது பற்றி தெரிவிக்க வேண்டும்.
குற்றப் பின்னணி உள்ளவர்களை அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக தெரிவு செய்திருந்தால், அதற்கான காரணங்களை அவை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதும் விதிமுறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...