குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

டிப்ளமோ தகுதிக்கு சென்னை BSNL நிறுவனத்தில் பணி

சென்னை BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி்யிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து

Updated On :12 மே 2013, 12:45 pm IST

சென்னை BSNL  நிறுவனத்தில் காலியாக உள்ள டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி்யிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதாவது சென்னை அலுவலகங்களில் 112 இடங்களும், செங்கல்பட்டு SSA-களில் 11 நிரப்பப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 123

பணியின் பெயர்: டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (டி.டி.ஏ.)

கல்வித் தகுதி: டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோ என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்ட்ஸ் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி ஆகிய ஏதேனும் ஒரு துறைகளில் டிப்பளமோ முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்.சி. (எலக்ட்ரானிக்ஸ்) படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

வயதுவரம்பு: 27க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.500 பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு. இதனை Accounts Officer (C&A) HQ Zone, BSNL, Chennai Telephones என்ற பெயரில் வங்கி வரவோலையாகவோ அல்லது அஞ்சல் முத்திரையாகவோ செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. ஆனால் அதற்கான சான்றிதழ்களை இணைத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்தும், புகைப்படம் ஒட்டியும் விண்ணப்பிக்கவும். தகுதிக்கான அனைத்து சான்றிதழ் நகல்களையும் அரசு அதிகாரிகளால் சான்றொப்பம் பெற்றிருத்தல் வேண்டும். ஏ4 காகிதத்தில் விண்ணப்பம் தயாரித்தும் அனுப்பலாம். விண்ணப்பத்துடன் சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஒன்றும் இணைக்கப்பட வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Sub Divisional Engineer (Recruitment), BSNL, Chennai Telephones, No.89, Millers Road, Chennai - 600010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி தேதி: 13.05.2013

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 30.06.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.