பவர்கிரிட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உதவி என்ஜினீயர் வேலை
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா


மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எலக்ட்ரிக்கல் பிரிவில் 100 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 20 பேரும், சிவில் பிரிவில் 20 பேரும், கணினி அறிவியல் பிரிவில் 10 பேர் என மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ., பி.டெக் மற்றும் பி.எஸ்சி முடித்து 2017-ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 31.12.2016 தேதியின்படி அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 செலுத்தி www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு 17.2.2018 கடைசியாகும்.
மேலும் வயதுவரம்பு சலுகை, எழுத்துத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...