மாதம் ரூ.85,000 சம்பளத்தில் தமிழ்நாடு குடிசைப் ஒழிப்பு வாரியத்தில் வேலை

தமிழ்நாடு குடிசைப் ஒழிப்பு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள தகவல், கல்வி மற்றும் தொடர்பு நிபுணர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாதம் ரூ.85,000 சம்பளத்தில் தமிழ்நாடு குடிசைப் ஒழிப்பு வாரியத்தில் வேலை
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு குடிசைப் ஒழிப்பு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள தகவல், கல்வி மற்றும் தொடர்பு நிபுணர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு குடிசைப் ஒழிப்பு வாரியம்

பணி: Information, Education and Communication. (IEC) Specialist 
காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 15.11.2021 தேதியின்படி, 45க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.85,000 வழங்கப்படும். 

தகுதி : காட்சித் தொடர்பு, மக்கள் தொடர்பு, மக்கள் தொடர்பு, இதழியல். சமூகப் பணி, மேம்பாடு போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்:  பணி சம்மந்தப்பட்ட பிரிவில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnscb.org/recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Superintending Engineer, Project Monitoring Unit, Tamil Nadu Urban Habitat Development Board, No.5, KamarajarSalai, Chennai-05

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.tnscb.org/wp-content/uploads/2021/11/Notification-IEC-Specialist.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com