கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழக உணவு பாதுகாப்புத் துறையில் வேலை வேண்டுமா?- ஆய்வக டெக்னீசியன் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:24 am

தினமணி


தமிழக உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.6/MRB/2021

பணி: Lab Technician Grade-II

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல், பயோவேதியியல் பிரிவில் பி.எஸ்சி., முடித்திருப்பதுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், டிஎம்எல்டி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .

விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி பிரிவினர் மற்றும் பொதுபிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mrbtn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2021/LT_Grade_II_TNFSSS_09112021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.