bel082357
bel082357

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பொதுத் துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொறியாளர், இணை மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


பொதுத் துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொறியாளர், இணை மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) 

பணி : Senior Engineer : ES-SE - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000 -1,60,000 வரை வழங்கப்படும்

பணி : Senior Engineer/ E-III- 10
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000 + இதர சலுகைகள் வழங்கப்படும்

வயது வரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி : Deputy Manager/ E-IV - 02
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 + இதர சலுகைகள் வழங்கப்படும்
வயது வரம்பு :  36 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் Aerospace, Aeronautical Engineering, E&C, Computer Sc Eng, Mechanical, Mechtronics போன்ற பிரிவுகளில் பிஇ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி : Accounts Officer/ E-I AO - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 வரை வழங்கப்படும்
தகுதி: CA அல்லது ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி : Deputy Engineer (Product Support)/ E-I - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு :  34 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் Electronics, Electronics மற்றும் Communication, Telecommunication, Electrical மற்றும் Electronics பிரிவுகளில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : Senior Engineer, Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். Accounts Officer மற்றும் Deputy Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  07.12.2021 மற்றும் 08.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விபரங்களை அறிய www.bel-india.in அல்லது https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=final%20Web%20Adv%20ENG-16-11-2021.pdf மற்றும் https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Recruitment%20of%20Deputy%20Engineers%20and%20Accounts%20Officer-BTSL-16-11-2021..pdf மற்றும் https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EED%20ES%2017112021-17-11-2021.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்