ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..?- மத்திய அரசு நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

புராஜெக்ட் அசிஸ்டெண்ட்,  புராஜெக்ட் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 8:18 am

தினமணி


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் அசிஸ்டெண்ட்,  புராஜெக்ட் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.SMR(K)Rect-01/2023-23

பணி: Research Scientist
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Project Assistant-A
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Project Assistant-A 
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Project Technician-B 
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.19,000
தகுதி: மெக்கானிக்கல்(பிட்டர்) பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Project Technician-A
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

பணி: Project Technician-A 
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,100
தகுதி: மெக்கானிக்கல்(பிட்டர் மற்றும் மெஷினிஸ்ட்) பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://kolkata.sameer.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒட்டு hrd@mmv.sameer.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவுத் தபாலில் 29.04.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Head Accounts & Administration Society for Applied Microwave Electronics Engineering and Research Plot-12, Block-GP, Sector-V, Satlt Laks Electronics Complex, Kolkata - 700 091.
Ph: 023 2357 4875/4894

மேலும் விவரங்கள் அறிய http://recruitmentkolkata.sameer.gov.in/public/uploaded/advertisement/1649415874.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.