தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உள்பட்ட தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உள்பட்ட தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.NIE/PE/Adv/January-2022/01
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Project Lower Division Clerk(Administrative Support-1)
காலியிடம்: 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Data Entry Operator(Project Information Technology Support)
காலியிடம்: 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்ள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன், டெக்னீசியன் உதவியாளர் வேலை!
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www,nie,icmr.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 02.02.2022
தேர்வு நடைபெறும் இடம்: ICMR-NIE
மேலும் விவரங்கள் அறிய https://www.nie.gov.in/images/pdf/careers/NIEPEAdvtJanuary-2022_01.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | யுபிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...