மத்திய அரசில் வேலை வேண்டுமா? 338 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 

மும்பையில் உள்ள கப்பல்படை தளத்தில் (நேவல் டக்யார்டு) பல்வேறு பிரிவுகளில் 338 டிரேடு 'அப்ரென்டிஸ்' பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
மத்திய அரசில் வேலை வேண்டுமா? 338 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 
Updated on
1 min read

மும்பையில் உள்ள கப்பல்படை தளத்தில் (நேவல் டக்யார்டு) பல்வேறு பிரிவுகளில் 338 டிரேடு 'அப்ரென்டிஸ்' பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 338

துறைவாரியான காலியிடங்கள்: 
1. எலகட்ரீசியன் - 49
2. மெக்கானிக் டீசல் - 39
3. மரைன் இன்ஜின் பிட்டர் - 36
4. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 28
5. வெல்டர் (கேஸ், எலக்ட்ரிக்) - 23
6. பைப் பிட்டர் - 22
7. ஷிப்ரைட் வுட் - 21
8. ஷிப்ரைட் ஸ்டீல் - 20
9. மெஷினிஸ்ட் - 15
10. மெக்கானிக் மெஷின் டூல் - 15
11. ரிக்கர் - 14 

தகுதி: பத்தாம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, சம்மந்தப்பட்ட பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.08.2001 முதல் 31.10.2008-க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பயிற்சி காலம் : ஒரு ஆண்டு 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும்: மும்பை

விண்ணப்பிக்கும் முறை : www.davp.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 08.07.2022

மேலும் விவரங்கள் அறிய  www.davp.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com