ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 29 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அறிக்கை எண். No.08/MRB/2022
பணி: Junior Analyst
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ. 34,400 - 1,15,700
தகுதி: வேதியியல் அல்லது உயிர்வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது பால்வளத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல் அல்லது உணவு தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, ஒசி பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்து 32, 42, 50க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவை, பெண்கள் பிரிவைச் சேர்ந்த ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2022
மேலும் விவரங்கள் அறிய https://mrb.tn.gov.in/pdf/2022/JA_notification_160322.pdf ன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.