ரூ.3.46 லட்சம் சம்பளத்தில் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.3.46 லட்சம் சம்பளத்தில் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்(TamilNadu Newsprint and Papers Limited (TNPL))

பணி : Executive Director (Finance) / Chief General Manager (Finance) - 01

பணி : Chief General Manager (Production)-Paper / General Manager (Production)-Paper - 01

பணி : Assistant Manager (Security) - 03

பணி : Medical Officer (Assistant Officer grade) - 01

சம்பளம்: மாதம் ரூ. 90,800 முதல் ரூ.3,46,015 

தகுதி : பட்டதாரிகள், சிஏ, சிஎம்ஏ, எம்பிஏ(நிதி), பிஇ, பி.டெக், முதுநிலைப் பட்டதாரிகள், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு : 01.01.2022 தேதியின்படி, 25 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
EXECUTIVE DIRECTOR (OPERATIONS)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI-600 032, TAMIL NADU

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  27.01.2022 

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpl.com அல்லது https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/Download-Advt-Details.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com