கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை... எம்.எஸ்சி. பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் எஸ்ஆர்எப் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் எஸ்ஆர்எப் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இன்று(ஜூலை 10) நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.

பணி: Senior Research Fellow

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரிவேதியியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுகள் 10.7.2024 ஆம் தேதி நடைபெறும்.

நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை படித்துவிட்டு தகுதியானவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Animal Feed Analytical abd Quality Assurance Laboratory, Veterinary College and Research Institute, Namakkal-637002. Phone: 04286-266288. இ-மெயில்: afqci-veri-nkl@tnuvas.org.in

மேலும் விவரங்கள் அறிய என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com