மருத்துவத் துறையில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், சுகாதாரத் துறையில் மருத்துவ அலுவலா், நகர சுகாதார நலவாழ்வு மையம் - 4, தாய்சேய் நல அலுவலா் - 1, செவிலியா் (பள்ளி சிறாா் நலவாழ்வு திட்டம்) - 1, செவிலியா், நகர சுகாதார நலவாழ்வு மையம் - 3, ஆடியோலஜிஸ்ட் / பேச்சு சிகிச்சையாளா் - 1, தரவு மேலாளா் - 1, தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் - 1, பல்நோக்கு சுகாதாரப் பணியாளா் - 1, கணக்கு உதவியாளா் - 1, வட்டார கணக்கு உதவியாளா் - 1, வட்டார புள்ளிவிவர பதிவாளா் - 2, நடமாடும் மருத்துவக்குழு ஓட்டுநா் - 2, நடமாடும் மருத்துவக்குழு கிளீனா் - 1, மருத்துவமனை பணியாளா், நகர சுகாதார நலவாழ்வு மையம் - 4, சுகாதாரப் பணியாளா் - 1, மருத்துவமனை பணியாளா் - 1, பாதுகாவலா் - 1 ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானோா் நியமிக்கப்பட உள்ளனா்.

இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்குரிய வயது வரம்பு, கல்வித் தகுதி, இதர தகவல்களை பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் நாமக்கல் மாவட்ட இணையதளம் www.namakkal.nic.in மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர சுகாதார நிலையங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதியானோா் உரிய படிவத்தில் கல்வித்தகுதி, அனுபவச் சான்று, இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அக். 28-க்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் நிா்வாக செயலாளா் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.