அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் (கிரேடு-2) பதவிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் (கிரேடு-2)
காலியிடங்கள்: 51
தகுதி: ஏதாவதொரு பல்கலை, நிறுவனத்தில் இளநிலை சட்டம் முடித்திருத்த வேண்டும். வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதோடு, குறைந்தபட்சம் குற்றவியல் நீதிமன்றங்களில் 5 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிருக்க வேண்டும். போதிய தமிழ் அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 36 வயது நிறைவடைந்திருக்கக் கூடாது.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு (எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடங்கியது) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல்நிலைத் தேர்வானது முதன்மைத் தேர்வுக்காக தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான தேர்வாகும். முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கத் தகுதியானவர்களாக அறிவிக்கப்படும் தேர்வர்கள் முதல்நிலைத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள், இறுதித் தகுதிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் முதன்மைத் தேர்விற்கு தகுதியான தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தால் வெளியிடப்படும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 14.12.2024
முதன்மைத் தேர்வு: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
முதன்மைத் தேர்வானது சென்னையில் மட்டும் நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணச் சலுகை கோராதவர்கள் முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
முதல்நிலைத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வுக் கட்டணச் சலுகை கோராத நிலையில் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை இணைய வங்கி, வங்கிகளின் பற்று அட்டை, கடன் அட்டை)இவற்றில் ஏதேனும் ஒரு முறையில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
முதல்நிலைத் தேர்வில் சட்டம் தொடர்பான ஒரு தாளுடன் கூடுதலாக பொது அறிவுத் தாளும், முதன்மைத் தேர்வில் ஏற்கனவே உள்ள சட்டம் தொடர்பான 4 தாள்களுடன் கூடுதலாக கட்டாய தமிழ் மொழித் தாளும் இடம்பெறுகின்றன. தமிழ் மொழித் தாளில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதில் பெறும் மதிப்பெண்கள் தெரிவு பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காந கடைசி நாள்: 12.10.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.