
இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள ஜூனியர் கமிஷன் அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Commission Officer (Catering)
தகுதி: குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Catering Technology, Hotel Management பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.10.2025 தேதியின்படி 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதிகள்: 166 செ.மீட்டர் உயரமும், 77 செ.மீட்டர் மார்பளவும், 50 கிலோ உடல் எடையும் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதிகள்: 6.15 நிமிடத்தில் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். Pull Ups, Zig Zag Balance, நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ராணுவத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர் வில் பெறும் மதிப்பெண்கள் அடிப் படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது அறிவு மற்றும் Catering Technology தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வு, உடற் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு தொடர்பான விபரம் அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும் நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.4.2025.