
பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 120 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். BOB/HRM/REC/ADVT/2025/03
பணி: Private Banker - Radiance Private காலியிடங்கள்: 3
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:1.3.2025 தேதியின்படி 33 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Group Head
காலியிடங்கள்: 4
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம், மேலாண்மைத் துறையில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:1.3.2025 தேதியின்படி 31 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Territory Head
காலியிடங்கள்: 17
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:1.3.2025 தேதியின்படி 27 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Relationship Manager
காலியிடங்கள்: 101
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று Relationship Manager ஆக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 1.3.2025 தேதியின்படி 24 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Wealth Strategist (Investment & Insurance)
காலியிடங்கள்: 18
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று Wealth Management துறையில் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.3.2025 தேதியின்படி 24 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Product Head - Private Banking
காலியிடம்: 1
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Portfolio Research Analyst
காலியிடம்: 1
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று 1 ஆண்டு Research Analyst ஆக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.3.2025 தேதியின்படி 24 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் எஸ்சி,எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். மேலும் பணி அனுபவத்திற்கேற்ப சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, இடபுள்யுஎஸ்,ஒபிசி பிரிவினர்களுக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.in/career என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2025
மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.