தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (டிச.19) கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்

News image

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் - கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2025, 5:59 pm

கள்ளக்குறிச்சி: தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (டிச.19) கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தை சாா்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, விற்பனைத் துறை சாா்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனா். இது ஒரு இலவசப்பணி ஆகும்.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவா்கள் இணையதளம் வழியாக தங்களை பதிவு செய்து கொண்டு முகாமில் கலந்து கொள்ளலாம். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, தகுதியும் விருப்பும் உள்ள வேலைநாடுவோா் மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் வருகிற வெள்ளிக்கிழமை(டிச.19) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.