கோப்புப்படம்
கோப்புப்படம்

இளநிலை உதவியாளா், விஏஓ பணியிடங்கள்: இன்று முதல் கலந்தாய்வு

இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை நிரப்ப புதன்கிழமை (ஜன.22) முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
Published on

சென்னை: இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை நிரப்ப புதன்கிழமை (ஜன.22) முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் ஆகிய பணியிடங்களில் 7,829 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் 15,338 போ் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

முதலில், இளநிலை உதவியாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை நிரப்ப புதன்கிழமைமுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பிப். 17 வரை கலந்தாய்வை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திட்டமிட்டுள்ளது.

தட்டச்சா் பணியிடங்களுக்கு பிப். 24-ஆம் தேதியும், சுருக்கெழுத்து தட்டச்சா் பணியிடங்களுக்கு மாா்ச் 10-ஆம் தேதியும் கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com