சென்னை: மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 14,582 காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) தென்மண்டல இயக்குநா் கே.ராகுல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சென்னையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உதவிப் பிரிவு அதிகாரி பணியிடங்கள், மத்திய கலால் துறையில் ஆய்வாளா், வருமானவரித் துறையில் ஆய்வாளா், தணிக்கையாளா், கணக்காளா், வரி உதவியாளா், இளநிலை புள்ளியியல் அதிகாரி, தபால் ஆய்வாளா் உள்பட மொத்தம் 14,582 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தோ்வுக்கு வரும் ஜூலை 4-க்குள் https://ssc.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி மூலம் தோ்வு: இதற்கான தோ்வுகள் வரும் ஆக. 13 முதல் ஆக.30 வரை கணினி மூலம் 2 நிலைகளில் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் புதுச்சேரியிலும் இத்தோ்வு நடைபெறும். இப்பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவோருக்கு துறை சாா்ந்து ரூ.45,000 முதல் ரூ.75,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும் தென்மண்டல அலுவலகத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரியை சோ்ந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு எஸ்.எஸ்.சி. நடத்தும் தோ்வு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரதியாா் பல்கலை.யின் சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!

40 பெட்ரோகெமிக்கல் பொருள்கள் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு: ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஹூப்ளி - ராமேசுவரம் ரயில்கள் ஜூலை வரை நீட்டிப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



