மத்திய அரசின் 'ஏ' நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ள முதன்மையான மினிரத்னா நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிரேன் ஆபரேட்டர், பணியாளர் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து மே 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Crane Operator(Diesel)
காலியிடங்கள்: 6
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக் ஆகிய ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்பட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Staff Car Driver
காலிப்பணியிடங்கள்:1
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பொது அல்லது தனியார் நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,300 முதல் ரூ.73,750 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 6.5.2025 தேதியின்படி 45, 50-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.5.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி: பேச்சுவாா்த்தை தோல்வி

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: 7-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



