தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணி
தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
Updated on
1 min read

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி : வேதியியல், உயிரியல், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், மருந்து அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். Drug Testing Lab-இல் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 26.5.2025 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் மன திறன், பொது அறிவு, ஆங்கில மொழிப் புலமை மற்றும் விண்ணப்பதாரரின் முக்கிய பாடப் பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் இதர தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் தேர்வு நுழைவுச் சீட்டில் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.1,000. இதர பிரிவினர்களுக்கு ரூ.500 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ndtlindia.com இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.5.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com