

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 84 துணை மேலாளர், கணக்காளர், சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Manager (Finance & Accounts)
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: நிதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library & Information Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: நூலக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிக்க வேண்டும்.
பணி: Junior Translation Officer
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accountant
காலியிடங்கள்: 42
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
தகுதி: சிஏ, சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Stenographer
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதி, அதனை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும், 65 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://nhai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.12.2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.