செவிலியா் உதவியாளா் நியமனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பு

செவிலியா் உதவியாளா் நியமனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது.
Published on

சென்னை: தமிழகத்தில் 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது.

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து முதல்கட்டமாக அவா்களில் 1,000 பேரை அரசு பணி நிரந்தரம் செய்தது. இதைத் தொடா்ந்து, 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், அவா்களுக்கான ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் என மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com