/

மெட்ராஸ் ஐஐடி-ல் வேலை வேண்டுமா..?

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-ல் திட்டப் பொறியாளர் எனும் தற்காலிகப் பணி குறித்து...

News image

மெட்ராஸ் ஐஐடி - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 2:34 pm IST

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-ல் திட்டப் பொறியாளர் எனும் தற்காலிகப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt.88/2026

பணி: Senior Project Engineer

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். இயற்பியல் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icsrstaff.iitm.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.6.2026

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited for the temporary post of Senior Project Engineer, at Silicon Photonics CoE-CPPICS IIT Madras.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.