சுற்றுச்சூழல் முன்னேற்றத்தில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடிதவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடுஸ்ரீரங்கம் கோயிலின் ரூ.50 கோடி நிலத்தை ஆக்கிரமித்ததாக திமுக நிர்வாகி மீது வழக்குமாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?இந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!

எல்லைச் சாலைகள் நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

எல்லைச் சாலைகள் நிறுவனத்தில்(பிஆர்ஓ) காலியாக உள்ள 899 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

job

எல்லைச் சாலைகள் நிறுவனத்தில் வேலை - கோப்புப் படம்

Published On :

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லைச் சாலைகள் நிறுவனத்தில்(பிஆர்ஓ) காலியாக உள்ள 899 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2026

பணி: Draughtsman(வரைவாளர்)

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சிவில் வரைவாளர் டிரேடில் ஐடிஐ படித்திருக்கவேண்டும் அல்லது சிவில் கட்டடக்கலை டிரேடில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Hindi Typist

சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Store Keeper (Technical)

சம்பள விகிதம்: 5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஸ்டேர் கீப்பர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27-குள் இருக்க வேண்டும்.

பணி: Operator(Communication)

சம்பளம்: மாதம் ரூ. 5,200 -20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயர்லெஸ் ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Operator (OEMOG)

சம்பளம்: மாதம் ரூ. ரூ.5,200 - 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Electrician

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன மின்பணியாளர் டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் மட்டும் ரூ.50 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எல்லைச் சாலைகள் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வு புணேயில் வைத்து நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், உடற்தகுதி விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

BRO Job Notification 2026 for Various Vacancy Details...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.