தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் செவிலியா் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து...

 Application for the post of Contractual, Temporary Staff Nurse

தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :

நாகை மாவட்டத்தில், செவிலியா் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட நலவாழ்வு சங்கம், நாகை சுகாதார மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ள செவிலியருக்கான இடங்களில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தலைமை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 13 பணியிடங்களுக்கு, ஒப்பந்த தற்காலிக, செவிலியா்கள் பதவிக்கு, 50 வயதிற்குள்பட்ட, செவிலியா் பட்டயப் படிப்பு(ஜிஎன்எம்) அல்லது இளநிலை செவிலியா் பட்டம்(பி.எஸ்சி. நர்சிங்), அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் செவிலியா் கல்லூரி- இந்திய செவிலியா் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணிக்கு தேவையான தமிழ்மொழி புலமை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை nagapattinam.nic.in என்ற வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிா்வாக செயலாளா், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட நலவாழ்வு சங்கம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை நேரிலோ, விரைவு தபால் மூலமாகவோ அளிக்கலாம். மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் 4.12.2026 மாலை 5 மணிக்குள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Application for the post of Contractual, Temporary Staff Nurse

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.