அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கு தேர்வு: டிச.4 முதல் 8 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 656 விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 8-ஆம்

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:54 pm

தினமணி

உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 656 விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றது.
அதில் மொத்தம் 3,578 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு முன்பு நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 656 விண்ணப்பதாரர்கள் தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
இதற்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம்  www.tnpsc.gov.in -இல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.