நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்டையில் நிரப்பப்படவுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் - முன்னுரிமையற்றவர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்கள் - முன்னுரிமைப் பெற்றவர் பிரிவு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - முன்னுரிமையற்றவர் ஆகிய இனசுழற்சி அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 21 முதல் 35 வரை. இதர வகுப்பினருக்கான வயது வரம்பு 21 முதல் 30 வரை. விண்ணப்பதாரருக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
தகுதியானோர், குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்று நகல், சாதிச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், வருமானச் சான்று நகல், முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ஏப். 10 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருக்குவளை வட்டாட்சியருக்குக் கிடைக்குமாறு நேரில் அல்லது அஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது

காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


