தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் கும்பகோணம், விழுப்புரம், சேலம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், சென்னை மாவட்ட பணிமனைகளில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பட்டதாரிகளுக்கான தொழில்பழகுநர் பயிற்சி
காலியிடங்கள்: 169
உதவித்தொகை: மாதம் ரூ.9,000
பணி: டிப்ளமோ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சி
காலியிடங்கள்: 177
உதவித்தொகை: மாதம் ரூ.7,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 2020, 2021, 2022 ஆம் கல்வியாண்டுகளில் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு 2013 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். நேர்முகத்தேர்வுக்கு வரும்போது தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் தங்களது தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தில் வழங்கப்படும் Unique Enrolment Number பயன்படுத்தி அதே இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முன்பதிவு செய்யவதற்கான கடைசி நாள்: 5.12.2022
தொழில்பழகுநர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.12.2022
மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


