மயிலாடுதுறை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ந.க.ண்: 800/ 2022/ ஊ.வ.2
பணி: ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்கள்: 5
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம் செய்து அதனுடன் ரூ.30 அஞ்சல் வில்லை ஓட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சி பிரிவு), ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முதல்தளம், மயிலாடுதுறை - 609 001
மேலும் விவரங்கள் அறிய https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு: கேஜரிவால் குற்றச்சாட்டு

இந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

திருவாரூருக்கு ஆக.17 இல் குடியரசுத் துணைத் தலைவா் வருகை

குறை கூறுவது மட்டுமே அரசியலல்ல! - கே. அண்ணாமலை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



