கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஜேஆர்எஃப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read


காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஜேஆர்எஃப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellows

காலியிடங்கள்: 60

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 65 சதவீத மதிப்பெண்களுடன் Physics, Material Science, Chemistry, Rediation Physics, Atmospheric Science, Meteorology, Chemical Engineering, CSE/EEE, Metallurgical Engineering, Mechanical Engineering  போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

GATE, JEST, NET போன்ற ஏதாவெதாரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: இந்திராகாந்தி அனு ஆராய்ச்சி மையத்தால்(IGCAR) நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு சென்னையில் 4.12.2022 ஆம் தேதி நடைபெறும். நேர்முகத் தேர்வு 5.12.2022 தேதி நடைபெறும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: IGCAR, Kalpakkam.

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு, விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant Personnel Officer(R), Recruitment Section, IGCAR, Kanchipuram District, Kalpakkam - 603 102, Tamilnadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 15.11.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com