ரூ.2,09,200 சம்பளத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் வேலை: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
By DIN | Published On : 12th November 2022 04:09 PM | Last Updated : 12th November 2022 04:09 PM | அ+அ அ- |

தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.: 637 அறிக்கை எண்.31/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சுகாதார அலுவலர்
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.56,900 - 2,09,200
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 37க்குள் உருக்க வேண்டும். ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ., / சீ.ம., பி.வ., மற்றும் பி.வ.மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.
தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் முடித்து பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளராக இருக்க வேண்டும். விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.200. பதிவுக் கட்டணம்: 150. கட்டணங்களை வங்கி பற்று, கடன் அட்டைகள் மற்றும் இணைய வழிகள் மூலம் செலுத்த வேண்டும். நிரந்தர பதிவுக்கட்டணம் செலுத்தியிருப்போர் பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: கணினி வழித் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.11.2022
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.