விண்ணப்பித்துவிட்டீர்களா..? டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொச்சியில் உள்ள தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


கொச்சியில் உள்ள தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.11/2022

பணி: Technician(Process)

காலியிடங்கள்: 45

சம்பளம்: மாதம் ரூ.9,200 - 32,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: வேதியியல், தொழிலக வேதியியல் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு கொச்சியில் நடைபெறும். தேர்வு குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.590. கட்டணத்தை ஆண்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com