இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
By DIN | Published On : 10th October 2022 04:08 PM | Last Updated : 10th October 2022 04:08 PM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் கீழ்வரும் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை உதவியாளர் - 2
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அதற்கு இணையன தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி மின் பணியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்சு சான்றிதழ் பெற்றிருப்பதுடன், எலக்ட்ரிக்கல் லைசன்ஸ் போர்டில் இருந்து "எச்" தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி பரிச்சாரகர் - 2
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயிலின் ஆகமவிதிப்படி நெய்வேத்திய பிரசாதங்கள் தயார் செய்து சுவாமிக்கு நெய்வேத்திய பிரசாதங்கள் எடுத்து சென்று வரவேண்டும்.
பணி: ஸ்தானியம் - 1
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவங்களினால் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களினால் நடத்தப்படும் ஆகமப் பயிற்சி பாடசாலைகளில் ஓராண்டுப் பயிற்சிச் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.swamimalai.hrce.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் திருக்கோயில் அலுவலக நேரத்திலும் www.tnhrce.gov.in மற்றும்
www.swamimalai.hrce.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று தெரிந்துகொள்ளவும்.