ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?
By DIN | Published On : 10th October 2022 04:27 PM | Last Updated : 10th October 2022 04:27 PM | அ+அ அ- |

இந்திய ரிசவ் வங்கி, ஜம்முவில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Pharmacist - 1
தகுதி: Pharmacist பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவருக்கு மணிக்கு ரூ.400 வழங்கப்படும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை பணி நாள்கள் ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Regional
Director, Reserve Bank of India, Human Resource Management Department, Recruitment
Section, Rail Head Complex, Jammu, J&K-180012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.10.2022
மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/PHARMACIST23092022F8AB2F6F879843B0AB4C6AFDE4BEF59D.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.