ரூ.63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

jobs notification TN Post Office Recruitment 2023 Apply for vacancies of Staff Car Driver
ரூ.63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Published on
Updated on
1 min read


மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஐடி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் கார் ஓட்டுநர் (குரூப் சி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிக்கை எண்: MSE/B9.2/XV/2021

நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் வட்டம்

பணி: ஸ்டாஃப் கார் ஓட்டுநர்

காலியிடங்கள்: 58

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் வாகன பழுதை சரிசெய்யும் திறன் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in மற்றும் https://tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மூத்த மேலாளர்(JAG), அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37(பழைய எண்16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை-600 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 31.3.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com