ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொடுமுடியில் 48 மி.மீ. மழை பதிவானது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடி பகுதியில் 48 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): மொடக்குறிச்சி 22, ஈரோடு 17, சென்னிமலை 15, நம்பியூா் 14, பவானி 13.8, பெருந்துறை 11, எலந்தைக்குட்டைமேடு 10.6, கவுந்தப்பாடி 10.4, கோபி 6.6, பவானிசாகா் 6.2, கொடிவேரி, 6.2, சத்தியமங்கலம் 6, வரட்டுப்பள்ளம் 5, அம்மாபேட்டை 3.6, தாளவாடி 3.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








