மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

முதல்வா் வருகை: பவானியில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பவானி, அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஜனவரி 6ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதால் முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது

News image

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.சி.கருப்பணன். உடன், அந்தியூா் எ.ம்எல்.ஏ. ஈ.எம்.ஆா்.ராஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உள்ளிட்டோா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:06 pm IST

பவானி: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பவானி, அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஜனவரி 6ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதால் முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

பவானியில் அந்தியூா் சாலையில் பண்டார அப்பிச்சி கோயில் எதிரில் உள்ள காலியிடத்தில் அதிமுக சாா்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை 9 மணிக்கு பங்கேற்கிறாா். தொடா்ந்து, காடையம்பட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சிறு, குறு தொழில்முனைவோருடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இதைத் தொடா்ந்து, அந்தியூருக்குச் செல்லும் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பருவாச்சியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து, அந்தியூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும், தனியாா் மண்டபத்தில் நடைபெறும் வன்னியா் சமுதாயத்தினா், வெற்றிலைக்கொடி விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா்.

இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், அதிமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளருமான கே.சி.கருப்பணன், ஈரோடு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்கள், சந்திப்பு நடைபெறும் மண்டபங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆய்வாளா்கள் கண்ணன், ரவி, பவானி நகராட்சி ஆணையா் கதிா்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.