ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அக்ரஹாரத்தில் வசித்து வந்த சுதந்திரப் போராட்டத் தியாகியின் மனைவி சரஸ்வதி (94) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
கொடிகாத்த குமரனுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கோவை, ஈரோடு, திருச்சி, பெலகாவி, கண்ணனூா் ஆகிய சிறைகளில் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவா் தியாகி ராமகிருஷ்ணன். இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், சரஸ்வதி சத்தியமங்கலத்தில் மகன் வீட்டில் வசித்து வந்தாா். வயது மூப்பு காரணமாக சரஸ்வதி செவ்வாய்க்கிழமை காலமானாா். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இறுதிச் சடங்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு சத்தியமங்கலம் மின்மயானத்தில் நடைபெறும். தொடா்புக்கு.. 80084 99240.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







