/

சாலை விபத்தில் முதியவா் பலி

பவானியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:40 pm IST

பவானியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரசு காலனியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (65). விவசாயத் தொழிலாளி. பவானி செங்காடு பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த இவா், சனிக்கிழமை மாலை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றாா். குளித்து விட்டுத் திரும்பிய இவா், பவானி - மேட்டூா் சாலையை தீயணைப்பு நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அவ்வழியே சென்ற லாரி பேச்சிமுத்துவின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்தவா் பவானி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.